மாணவரணி செய்திகள்


தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ?

தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து நாம் நினைத்த வேலைக்கு போக முடியும்.

முழுதும் வாசிக்க
Download பகுதிக்கு செல்லவும்
------------------------------------------------------------------------------------

TNTJ மாணவர் அணியின் இந்தவார் கல்வி சேவை நிகழ்ச்சி

நிகழ்ச்சி பற்றி விவரங்களை அறிய கிளிக் செய்யவும்



--------------------------------------------------------------------------------

TNTJ மாணவர் அணியின் அல்லாஹ்வின் நாட்டதொடு நடந்து முடிந்த கல்வி சேவை நிகழ்ச்சி பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்


-----------------------------------------------------------------------------------------------


இஸ்லாம் தற்கொலைத் தாக்குதல்களை ஆதரிக்கின்றதா?


தற்கொலைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாத அளவுக்குச் சான்றுகள் உள்ளன.

ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்த்தை ஹராமாக்கி விட்டேன் என்று கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி), நூல்: புகாரி 1364


------------------------------------------------------------------------------

சமுதாயம் கல்வியில் முன்னேற..

மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகைகளில் சிறப்புற்று விளங்குகிறது. மதங்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தை மட்டுமே போதிக்கின்றன. உலக விவகாரங்களில் அவை தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாம் மட்டும்தான் ஆன்மீகத்தையும் உலகத்தையும் இணைத்து மனிதனுக்கு அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தௌவான வழியைக் காட்டுகிறது.

படைத்தவனை வணங்க வேண்டும் என்று கூறும் இஸ்லாம் உலகத்தையும் சிந்தித்து அதில் இறைவன் வைத்திருக்கும் ஆற்றலை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று பணிக்கிறது.

-------------------------------------------------------------------------------------------


"நாத்திக" தத்துவ பேராசிரியருடன் ஒரு முஸ்லீம் மாணவன் நடத்திய " உரையாடல் " - ஆங்கிலத்தில்


----------------------------------------------------------------------------------------------




சகோதரர் பீ.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் கலந்த்துரையாடிய நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பு :

கல்வி மற்றும் மாணவர்கள் சம்மந்தமான கேள்விகளுக்கு சகோதரர் பீ.ஜெய்னுல் ஆபிதீன்
அவர்கள் அளித்த பதில்கள்

சல்யூட் அடிக்கலாமா?, தேசியகீதம் பாடலாமா? உயர் அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு எழுந்து நிர்க்கலாமா?


தேர்வுகளில் வட்டி கணக்கு போடலாமா?, தேர்வுகளில் காப்பி, பிட் அடிக்கலாமா?, திருக்குறல், காப்பியங்கள், இலக்கியங்கள் படித்து மனப்பாடம் (தேர்வுக்காக) செய்யலாமா?

(மாற்றுமத) நண்பர்களில் திருமணத்திற்க்கு, விஷேஷங்களுக்கு போகலாமா?, விருந்தில் கலந்து கொள்ளலாமா?

கோ- எஜிகேஷன் (Co-Education) கூடுமா?

பள்ளி-கல்லூரிகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் (Cultureless, ஆண்டு விழா ) கலந்து கொள்ளலாமா?, அதற்க்கு பணம் தரலாமா?

பண்டிகை, பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்து சொல்லலாமா?



----------------------------------------------------------------------------------------


உயர் கல்வி பெறுவது எப்படி? மாதம் பல லட்சம் ரூபாய் இந்தியாவில் சம்பாதிப்பது எப்படி?

இந்தியாவில் IISC, IIT, IIM, NIT, Bits Bilani போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளன. மேலும் சென்னையில் அண்ணா பல்கலை கழகத்திற்கு சொந்தமான CGE, AC-Tech, MIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களும் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி ஆண்டிலேயே வளாக தேர்வு (campus interview) மூலம் வேலை கிடைத்து விடுகின்றது

மாத சம்பளம்.....
முழுவதும் வாசிக்க..


-------------------------------------------------------------------------------

ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி பயில உதவிடுவீர்

ஒவ்வொரு சமுதாயத்திலும் இளம் மாணவர்கள் டாக்டர், ஆராய்ச்சியாளர், பொறியாளர் போன்ற கல்வி கற்பதற்கு பொருளாதார உதவியின்றி தத்தளித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் நமது முஸ்லிம் சமுதாயம், ஆரம்ப பாடசாலை, உயர்நிலைப் பள்ளி போன்றவற்றில் கற்பதற்குக் கூட......

---------------------------------------------------------------------------

இஸ்லாம் பெண் கல்வியை மறுக்கிறதா?

தினமணி கதிரில் (14.06.2009) 11ம் பக்கத்தில் 'அக்கரைச் சீமை' என்ற தலைப்பில் ராணி மைந்தன் என்பவர் எழுதிதியுள்ளார். அதில் சில விஷமக் கருத்துகளை கூறியுள்ளார். என்னவென்றால் 'தாலிபாகளுக்கு நம்பர் ஒன் எதிரி பெண் கல்வி' என்றும் பெண் கல்வி கூடாது என்று தாலிபான்கள் சொல்லக் காரணம் இது இஸ்லாமிய நெறி முறைகளுக்கு முரணானது என்று நினைப்பது தான் என்றும் தனது கருத்தை கூறியுள்ளார்.

இது தினமணியின் அறியாமையைத்தான் காட்டுகிறது. குர்ஆனின் முதல் வேத வெளிப்பாடான வசனமே
......

முழுவதும் வாசிக்க...

-----------------------------------------------------------------------

பட்டய (Diploma) படிப்பை விட பட்ட (Degree) படிப்பே சிறந்தது

பல்வேறு டிப்ளமோ படிப்புகளில் சேர்ந்து படிப்பதைவிட அது தொடர்பான பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிப்பதன் மூலம் வேலைவாய்ப்புக்கான சாத்தியத்தை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பதை கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இதற்கேற்ற வகையில், பல்வேறு டிப்ளமோ படிப்புகளை நடத்திய கல்வி நிறுவனங்கள் அது தொடர்பான பட்டப் படிப்புகளுக்கு மாறிவிட்டன. தற்போது ஏராளமான இன்ஜினியரிங் கல்லூரிகள் உருவாகியுள்ள நிலையில், பொறியியல் தொடர்பான பல்வேறு பணிகளுக்கு...

Read more...

TNTJ மாணவர் அணியின் இந்தவார கல்வி சேவை நிகழ்ச்சி

TNTJ மாணவர் அணி நடத்தும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? பயிற்சி முகாம் (இன்ஷா அல்லாஹ்)


இடம்

நாள் /நேரம்

தொடர்பிற்க்கு

1

தொண்டி

09/01/10-

10AM

9894652633

2

கூத்தாநல்லூர்

10/01/10-

10AM

9942789714,

3

நிரவி (காரைகால்)

10/01/10-

4PM

9976615655

4

பனை குளம்

10/01/10-

10AM

9894652633

5

முக்கன்னாமலைபட்டி

10/01/10-

4PM

9043486280




இடம்

முகவரி

சிறப்புரை

1

தொண்டி


சகோ.கலீல்.M.B.A

2

கூத்தாநல்லூர்

TNTJ அலுவலகம் , அப்துல் ரஹ்மான் ரோடு, கூத்தாநல்லூர், திருவாரூர் மாவட்டம்

N.அல் அமீன் B.E

3

நிரவி (காரைகால்)

ஹுஸைனியா பெண்கள் மேல் நிலை பள்ளி அருகில், மேல ராஜ வீதி, நிரவி, காரைகால்

N.அல் அமீன் B.E

4

பனை குளம்

TNTJ மர்கஸ், கீழக்கு தெரு , பனை குளம், இராமநாதபுரம் மாவட்டம்

சகோ.கலீல்.M.B.A.

5

முக்கன்னாமலைபட்டி

TNTJ மர்கஸ்,கிழக்கு தெரு, முக்கன்னாமலைபட்டி , புதுகோட்டை மாவட்டம்

M. ஹாஜா.B.E


Read more...

இஸ்லாம் தற்கொலைத் தாக்குதல்களை ஆதரிக்கின்றதா?

தற்கொலைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாத அளவுக்குச் சான்றுகள் உள்ளன.

ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்த்தை ஹராமாக்கி விட்டேன் என்று கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி), நூல்: புகாரி 1364
யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத் தாமே (ஆயுதத்தால்) தாக்கி, தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1365
தற்கொலை செய்து கொண்டால் நிரந்தர நரகம் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே தற்கொலை கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் போரில், எதிரிகளை அழிப்பதற்காக தற்கொலை செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். இது தற்கொலை அல்ல! இதுவும் போர் தான் என்றும் கூறுகின்றனர். எனவே இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.
ஒரு காரியம் நிரந்தர நரகம் என்று தெரிந்த பின்னால் அதில் விழுந்து விடாமலிருக்க மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தற்கொலைத் தாக்குதல் கூடும் என்று வாதிட்டால் அதற்கான தெளிவான நேரடியான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அது போன்ற நேரடியான ஆதாரம் எதையும் இவர்கள் காட்டுவதில்லை. இன உணர்வைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இவர்களிடம் இல்லை என்பது தான் உண்மை!
போர் என்பதே தற்கொலை தான், எத்தனையோ நபித்தோழர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர், இதுவெல்லாம் தற்கொலையா? என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். இதுவும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்.
போரில் பங்கெடுக்கும் போது வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. தவறினால் உயிர் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இரண்டையும் ஒருசேர எதிர்பார்த்துத் தான் போரில் களம் இறங்குவர். ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இதில் உயிரோடு திரும்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை. உயிரை மாய்ப்பது மட்டுமே இங்கு உள்ளது. இதையும் போரில் வீர மரணம் அடைவதையும் சமமாகக் கருத முடியாது.
போரில் கூட தற்கொலை செய்து கொள்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை புகாரியின் 2898, 3062 போன்ற ஹதீஸ்களில் காணலாம்.
தற்கொலைத் தாக்குதல்களை நியாயப் படுத்த இவர்கள் மற்றொரு வாதத்தையும் எடுத்து வைக்கின்றனர். ஒருவன் வாழ முடியாத நிலையில் செய்வது தான் தற்கொலை. ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுவோர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் செய்யவில்லை. எதிரிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்கின்றனர். எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி - கிடைக்கும் என்ற அடிப்படையில் தற்கொலைத் தாக்குதல் அனுமதிக்கப் பட்டது தான் என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.
எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி என்பதற்கு இவர்கள் கூறும் தவறான வியாக்கியானத்தின் மூலம் இதை நியாயப்படுத்த நினைக்கின்றனர்.
எண்ணத்தின் அடிப்படையில் கூலி என்பது அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் தான். தடுக்கப்பட்ட ஒரு காரியத்தை நல்ல எண்ணத்தில் செய்கின்றேன் என்று கூறி யாரும் நியாயப் படுத்த முடியாது.
உதாரணமாக நோன்பு வைப்பவர் அல்லாஹ்வுக்காக நோன்பு வைப்பதாக எண்ணிக் கொண்டு வைத்தால் அவருக்கு நோன்பின் கூலி கிடைக்கும். ஆனால் தனது உடல் இளைப்பதை நோக்கமாகக் கொண்டு நோன்பு வைத்தால் நோன்பின் எல்லா விதிகளும் பின்பற்றப் பட்டாலும் அவருக்கு நோன்பிற்கான கூலி கிடைக்காது. இதே உதாரணத்தை தடுக்கப்பட்ட செயல்களுக்குப் பொருத்திப் பார்க்க முடியாது.
போரையே எடுத்துக் கொள்வோம். போரில் காயம் ஏற்படும் போது வலி தெரியாமல் இருப்பதற்காக ஒருவர் மது அருந்தினால் அது குற்றமில்லை என்று கூற முடியுமா? அவருக்குப் போதையில் இருக்க வேண்டும் என்பது நோக்கமல்ல! வலி தெரியாமல் மேலும் மேலும் போரிட வேண்டும் என்பதற்காகத் தான் குடிக்கின்றார். இதற்காக அல்லாஹ் அவருக்கு நன்மையை வழங்கி விடுவான் என்று யாரும் வாதிட மாட்டார்கள்.
விபச்சாரம் என்ற நோக்கம் இல்லாமல், எதிரிகளின் குடும்பத்தை நிர்மூலமாக்குவதை நோக்கமாகக் கொண்டு அவர்களின் பெண்களைக் கற்பழிக்கலாம் என்று கூற முடியுமா? அல்லது இஸ்லாத்தின் விரோதிகள் என்பதால் அவர்களுடைய சொத்துக்களைக் கொள்ளையடிக்கலாம், திருடலாம் என்று வாதிட முடியுமா? நோக்கம் நல்லதாக இருந்தாலும் செயல் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு இவையே போதுமான உதாரணங்கள்.
தற்கொலைத் தாக்குதல்கள் கூடும் என்று வாதிப்பவர்கள் இந்தப் பிரச்சனையை மார்க்க அடிப்படையில் சிந்திக்காமல் உணர்வுப் பூர்வமாக மட்டுமே சிந்திக்கின்றார்கள். உலகெங்கும் முஸ்லிம்களுக்கு இழைக்கப் படும் அநீதிகள், நேருக்கு நேர் மோத முடியாத அளவுக்குள்ள எதிரியின் ஆயுத பலம், இன உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல்களை நியாயம் கற்பிக்கின்றனர்.
ஆனால் ஒரு முஸலிம் எவ்வளவு தான் அநீதி இழைக்கப் பட்டாலும், என்ன நியாயம் அவனிடம் இருந்தாலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டுமே நடக்க வேண்டும். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து விடக் கூடாது. இதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது.
இதைக் கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய்ந்தால் உலகின் பல பகுதிகளில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம்.
உலகில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களில் பெரும்பாலானவை யாருக்கு எதிராக நடத்தப் படுகின்றன என்று பார்த்தால், இதில் பலியாவோர் பொது மக்களாக இருப்பதைக் காண முடியும்.
பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்துகள், இரயில்கள், விமானங்கள், கடைவீதிகள், வணிக வளாகங்கள் போன்றவை தான் தற்கொலைத் தாக்குதல்களின் முக்கிய இலக்காக உள்ளன.
போர்க் களத்தில் எதிரிகளுடன் நேருக்கு நேர் நின்று மோதும் போது எதிரிகளைக் கொல்வதை யாரும் கொலை என்று கூற மாட்டார்கள். ஆனால் இத்தகைய போர்க்களங்களில் கூட பணிவிடை செய்வதற்காக வந்துள்ள பெண்களையும், சிறுவர்களையும் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற செய்தி புகாரி 3014, 3015 ஆகிய ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளன.
புகாரியில் 3012, 3013 ஆகிய ஹதீஸ்களில், பெண்களும் குழந்தைகளும் அவர்களைச் சேர்ந்தவர்களே என்று நபி (ஸல்) அவர்கள் கூறி அவர்களைக் கொல்வதை நியாயப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் மூலம் பொதுமக்களைக் கொல்வது தடையில்லை என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். ஆனால் இந்த ஹதீஸ் மாற்றப்பட்டு விட்டது.
நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் பெண்களும் சிறுவர்களும் கொல்லப் படுவதை முதலில் அனுமதித்தனர். பின்னர் இதைத் தடை செய்து விட்டனர் என்ற செய்தி அபூதாவூதில் 2298வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. ஒரு செயல் முதலில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடை செய்யப் பட்டால் தடையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே போர்க்களத்தில் கூட பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதற்கு அனுமதியில்லை என்பது தான் அல்லாஹ்வின் தூதருடைய தெளிவான தீர்ப்பாகும்.
நபி (ஸல்) அவர்கள் அனுப்பிய ஒரு படையினர் சிறுவர்களையும் கொன்று விட்டனர். இதைக் கேள்விப்பட்ட நபி (ஸல்) அவர்கள் விசாரணை நடத்திய போது, அவர்களும் இணை வைப்பவர்களின் வழித் தோன்றல்கள் தானே என்று நபித்தோழர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "கொலை செய்வதில் இவர்கள் வரம்பு மீறி விட்டனர். சிறுவர்களைக் கொல்லாதீர்கள்! சிறுவர்களைக் கொல்லாதீர்கள்! பிறக்கும் குழந்தைகள் யாவும் (இஸ்லாம் எனும்) இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன.
அவர்கள் உணர்ந்து கொள்ளும் வரை அதிலேயே உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் தான் அவர்களை மாற்றி விடுகின்றனர்'' என்று கூறினார்கள்.
(நூல்: அஹ்மத் 15036, 15037)
குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் அதற்கான காரணத்தையும் இங்கு குறிப்பிடுகின்றார்கள்.
முன்னர் அனுமதிக்கப் பட்டு பின்னர் தடைசெய்யப் பட்டதால் தான் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு அபூபக்ர் (ரலி அவர்கள் யஸீத் பின் அபீசுஃப்யான் தலைமையில் படை அனுப்பிய போது பிறப்பித்த பத்து கட்டளைகளில் பெண்களையும் சிறுவர்களையும் முதியவர்களையும் கொல்லாதீர்கள் என்ற கட்டளையையும் சேர்த்துப் பிறப்பிக்கின்றார்கள். இந்தச் செய்தி முஅத்தாவில் 858வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்களையும் சிறுவர்களையும் போரில் கொல்லக் கூடாது என்ற தடை தான் இறுதியானது என்பதை அபூபகர் (ரலி) அவர்கள் உறுதிப் படுத்துகின்றார்கள்.
ஆனால் இதற்கு மாற்றமாக பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள், பொது மக்கள், பயணிகள், வர்த்தகர்கள் என்று போருக்குச் சம்பந்தமில்லாத அப்பாவிகளை இலக்காக வைத்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதே இது மார்க்கத்திற்கு முரணானது என்பதை வலியுறுத்துகின்றது.
மார்க்கம் அனுமதித்த காரியத்தைச் செய்யும் போது இது போன்ற விளைவுகளைப் பற்றி கவலைப் படக் கூடாது. ஆனால் தற்கொலைத் தாக்குதலுக்கு அனுமதி இல்லை என்பதால் இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் இங்கு நாம் குறிப்பிட வேண்டியுள்ளது.
அப்பாவிகள் கொல்லப் படுவதைக் காணும் முஸ்லிமல்லாதவர்கள், முஸ்-ம்களையும் இஸ்லாத்தையும் வெறுப்புடன் பார்க்கத் துவங்குகின்றனர். இதனால் இஸ்லாத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப் படுகின்றது.
தற்கொலைத் தாக்குதல்களை நியாயப் படுத்துவோரில் பலர் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத போது, அதாவது தொலைவான பகுதிகளில் நடக்கின்ற போது மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆனால் அதே சமயம் தாங்கள் வாழும் பகுதியில் நடந்து, அதனால் இவரது குடும்பமோ சொத்துக்களோ பாதிக்கப்படும் போது அதைக் கண்டிக்கின்றார்கள்.
மார்க்க அடிப்படையிலும் சரி! இதுபோன்ற தர்க்க ரீதியிலான காரணங்களாலும் சரி! தற்கொலைத் தாக்குதல்களுக்கு அனுமதி இல்லை என்பது தான் உண்மையாகும்.


ஹசன் பஷீர் . B.E

Read more...

சகோதரர் பீ.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் கலந்த்துரையாடிய நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பு :

கல்வி மற்றும் மாணவர்கள் சம்மந்தமான கேள்விகளுக்கு சகோதரர் பீ.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில்கள்


தேர்வுகளில் வட்டி கணக்கு போடலாமா?, தேர்வுகளில் காப்பி, பிட் அடிக்கலாமா?, திருக்குறல், காப்பியங்கள், இலக்கியங்கள் படித்து மனப்பாடம் (தேர்வுக்காக) செய்யலாமா?

(மாற்றுமத) நண்பர்களில் திருமணத்திற்க்கு, விஷேஷங்களுக்கு போகலாமா?, விருந்தில் கலந்து கொள்ளலாமா?

கோ- எஜிகேஷன் (Co-Education) கூடுமா?

பள்ளி-கல்லூரிகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் (Cultureless, ஆண்டு விழா ) கலந்து கொள்ளலாமா?, அதற்க்கு பணம் தரலாமா?

பண்டிகை, பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்து சொல்லலாமா?

Read more...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவர் அணி- செய்திகள்

  © தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவர் அணி Developed By TNTJ மாணவர் அணி Web-Team 2009

Back to TOP